வியாழன், 18 நவம்பர், 2010

Agaval. Ramalinga vallalar

தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட .1450

என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் த்சையெலா மெய்யுறத் தளர்ந்திட

இரத்து மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொரு திரளாயிட

மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட

ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட

உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட .1460

வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட

மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட

மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்த மியைந்து களித்திட

அகங்கார மாங்காங் கதிபா஢ப் பமைந்திடச்
சகங்காண வுள்ளத் தழைத்து மலர்ந்திட

அறிவுறு வனைத்து மானந்த மாயிடப்
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத் .1470

தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்
சத்துவா மொன்றே தனித்துநின் றோங்கிட

உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட

என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
என்னுளத் தோங்கிய என்றனி யன்பே

பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே

தன்னையே யெனக்குத் தந்தெரு ளொளியால்
என்னைவே தித்த என்றனி யன்பே .1480

என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து
என்னுளே வி஡஢ந்த என்னுடை யன்பே

என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
என்னுளே கனிந்த வென்னுடை யன்பே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts