புதன், 25 ஜனவரி, 2012

திருக்கதவம் திறவாயோ


திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ
உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே
கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே




நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசிமுனை துவாரமே, அதன்
உள்துலங்கும் சிவம் இருக்கும் வீட்டின் வாசலாகும்! அந்த வாசல்
மெல்லிய ஜவ்வால் அடைக்கப்பட்டுள்ளது! அந்த ஜவ்வையே கதவு என்கின்றனர் ஞானிகள்! திருக்கதவமாகிய கண்மணி வாசல்
திறக்காதா!? ஜவ்வே திரைகளாக சொன்னார்! கண்மணி மத்தியில்
உணர்வு பெற திருவடி தீட்சை பெற்று தவம் செய்தால், உள்ளிருக்கும் சிவம் திருக்கதவை திறந்து தன் உரு காட்டி அருள்வார்!

மெய் உருகி தவம் செய்து உள் ஊறும் அமுதம் உண்டு உடம்பும் உயிரும்
ஒளிமயமாகிட திருவடி தீட்சை யாகிய மெய் உணர்வு அருள்வாயே!

கருவை தன்னுள் கொண்ட தனி ஒளி வடிவமே! கருவில் கலந்த
துணையே! உன்னை என்னுட்கலந்து பேரின்பத்தில் இரவு பகலற்று
எப்போதும் திளைத்திட அருள் செய்வயாக! அன்பே நாடும் அமைதியையே
நாடிடும் மெய்யடியர்களுக்கே அருளும் சித்திகள் விளங்கும் பரசிவமே
எல்லாம்வல்ல பெருமைமிகு மணியே கண்மணியே அங்கே விளங்கும்
நடமிடும் நாயகனே இறைவா!

'மணிக்கதவம் திறவாயோ மறைப்பை எல்லாம் தவிர்த்தே!"

கண்மணி மத்தியில் உள்ள மெல்லிய ஜவ்வாகிய கதவை  திறப்பாயே!
அந்த மெல்லியே ஜவ்வே நம் மும்மலமாகிய கர்மத்திரையாக
விளங்குகிறது! அந்த திரை மறைப்பு நீங்கினாலே உள் உள்ள சிவத்தை காணமுடியும்!

திரை நீங்கினாலே ஜோதி தரிசனம். சத்திய ஞான சபையில் வள்ளல்பெருமான் ஏற்படுத்திய அமைப்பு இதுவே! நம் கண்மணியுள் விளங்கும் ஜோதியை ஆத்ம ஜோதியை தரிசிக்க தடையாக உள்ளதே நம் வினையாகிய திரை! மெல்லிய ஜவ்வு! ஞான சற்குரு மூலம் திருவடி உபதேசம் பெற்று தீட்சை பெற்று மெய் உணர்வு பெற்று சும்மா இருந்து தவம் மேற்கொண்டால் ஜவ்வு - திரை உஷ்ணத்தால் உருகி கரையும்.
விலகும் அப்போது ஜோதி தரிசனம் கிட்டும்!

நாம் உய்ய வழி காட்டியிருக்கிறார் வள்ளல் பெருமான்.

வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் பார்த்து மகிழ்ந்தவர்களே
உங்களுக்குள் அந்த ஜோதி தரிசனம் காண வேண்டுமா?

தங்க ஜோதி ஞான சபைக்கு வாருங்கள்! வள்ளலார் உங்களுக்கு மெய் உணர்வு தந்து உங்களுக்கு உள்ளே தங்க ஜோதியை தரிசிக்க அருள்புரிவார்!

கூடவே துணையாக இருந்து ஞானம் பெற நல் வழிகாட்டுவார்! ஒளி ஊட்டுவார்! மரணமில்ல பெருவாழ்வு பெறலாமே நாமே!

- ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை நாலஞ்சாறு  பக்கம் 138


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

1 கருத்து:

  1. அன்பு நண்பரே,
    கீழ்க்கண்ட வரிகளை ,படிக்கும் பொழுது ,என் கண் கலங்குகிறது.
    நாம் உய்ய வழி காட்டியிருக்கிறார் வள்ளல் பெருமான்.

    வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் பார்த்து மகிழ்ந்தவர்களே
    உங்களுக்குள் அந்த ஜோதி தரிசனம் காண வேண்டுமா? கன்னியாகுமரிக்கு
    தங்க ஜோதி ஞான சபைக்கு வாருங்கள்! வள்ளலார் உங்களுக்கு மெய் உணர்வு தந்து உங்களுக்கு உள்ளே தங்க ஜோதியை தரிசிக்க அருள்புரிவார்! கூடவே துணையாக இருந்து ஞானம் பெற நல் வழிகாட்டுவார்! ஒளி ஊட்டுவார்! மரணமில்ல பெருவாழ்வு பெறலாமே நாமே!

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Popular Posts