ஞாயிறு, 18 மார்ச், 2012

சன்மார்க்கம் நடத்துவது யார்?


"உலகமெலாம் போற்ற ஒளிவடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே - திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் நம் பெருமான்
தானே எனக்குத் தனித்து" - திருவருட் பிரகாச வள்ளலார்


இறைவன் ஒளிவடிவானவர்! அருள் பெருஞ்சோதி ! பிறந்து
வாழ்ந்து ஞான தவம் செய்து அந்த எல்லாம் வல்ல
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலையாகவே - ஒளியாகவே
ஆனவர் நமது திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்!!

1865  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வடலூரில் ஆரம்பித்த வள்ளல்
பெருமான் வேறு யாரிடமும்  அதை ஒப்படைக்கவில்லை ! நானே சன்மார்க்கம் என் பறை சாற்றுகிறார்!

அறிந்த - உணர்ந்த ஆன்ம நேய ஒருமைப்பாடுடைய திவ்ய ஆத்மா  சொரூபிகளுக்கு கூடவே இருந்து, தோன்றும் துணையாக துலங்கி வழி நடத்துகிறார்! கண்ணுள்ளவர் நோக்கக் கடவர்! நம் பெருமான் அருட்பெருன்ஜோதியின் அருளே எல்லாம்!
 

-புரட்டாசி சித்திரையை வள்ளலார் பிறந்தநாளை குருபூஜையாக
கொண்டாடாமல் விட்டீரே  ஏன்?

2 கருத்துகள்:

  1. சன்மார்க்கம் நடத்தும் தகுதி யாருக்கு ?

    ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்

    வள்ளலார் இந்த உலகத்திற்கு கொடுத்த கொடை
    தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாகும் ;-இவை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் கட்டளைப்படி, வள்ளலார் மக்கள் முன்னிலையில் வடலூரில் அமைத்துள்ளார்.சன்மார்க்க சங்கத்தை வழிநடத்தும் தகுதி சாதாரண மக்களுக்கு பொருந்தாது .அருள் பெற்றவர்கள் தான் வழி நடத்த முடியும் .

    வள்ளலார் சங்கத்தை அமைத்துவிட்டார் அதில் அங்கம் வகிப்பவர்கள் தயவு உடையவர்களாக இருக்க வேண்டும்.அதனால்தான் தயவு உடையவர்கள் எல்லாம் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் என்றார் வள்ளலார்.அருள் உடையவர்கள் எல்லாம் சன்மார்க்கத்தை அடைந்தவர்கள் என்று தெளிவான விளக்கம் தந்துள்ளார்.

    தயவு உள்ளவர்கள் சன்மார்க்க சங்கத்தில் உள்ள ஒழுக்கங்களையும்,கொள்கைகளையும் முதலில் கடைபிடிக்க வேண்டும் அருள் பெற்ற பின் சன்மார்க்க சங்கத்தை வழி நடத்த வேண்டும் என்பது வள்ளலார் மக்களுக்கு கொடுத்துள்ள உறுதியான செய்தியாகும்

    அதனால்தான் வள்ளலார் நானே சன்மார்க்கத்தை நடத்துகிறேன் என்றார்.இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன ?அருள் பெறாதவர்கள் சன்மார்க்க சங்கத்தை நடத்தும் தகுதி அற்றவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

    சன்மார்க்க சங்கத்தலைவர் அருட்பெரும் ஜோதி ஆண்டவராகும் சன்மார்க்க சங்கத்தலைவனே நினைப போற்றும் மார்க்கம் என்மார்க்கமே,என்று புகழ்ந்து கூறுகிறார்.

    ஆதலால் இறைவன் அருள் ஆணைப்படி சன்மார்க்க சங்கத்தை வழி நடத்துபவர் நமது அருட்தந்தை அருட்பிரகாச வள்ளலார் என்பது சத்தியமான உண்மையாகும்.அவர் ஒளி உடம்பாக இருந்து செயல் படுத்திக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் .

    யார் அருள் பெறுகிறார்களோ அவர்களிடம் சன்மார்க்க சங்கத்தை,நடத்தும் பொறுப்பை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் கொடுப்பார் .அது வரையில் வள்ளலார்தான் சன்மார்க்கத்தை நடத்துவார்

    அருளைப் பெற முயற்ச்சி செய்வோம் ,பொறுப்பு தானே தேடிவரும்.அதன்பின் சன்மார்க்கத்தை வழி நடத்தும் தலைவன் ஆவோம் .

    அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு .

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அய்யா அவர்களுக்கு,
    வள்ளலாரின் அருள் கிடைத்தால் மட்டுமே ,நம்மால் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நடத்த இயலும்.அதற்க்கு ,முதலில் ,மனதை பக்குவபடுத்தி ,வள்ளலார் வகுத்துக்கொடுத்த நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.எல்லாம் அவன் செயல் . மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Popular Posts