ஞாயிறு, 28 ஜூலை, 2013

சோமாஸ்கந்த தத்துவம்

"உச்சிக்குக்  கீழது உண்ணாக்கு மேலது
வைச்ச பதமிது வாய் திறவாதே




என்று திருமூலர் கூறி வாய்திறவாதே சும்மா இரு என்றார்! இடது கண்ணில் தவத்தை ஆரம்பித்து சக்தியில் தொடங்கி வலது கண்ணிலே  தவத்தை தொடர்ந்து சிவத்தோடு சேர்ந்தால் பிறக்கும் நம் இரு கண்ணொளி! ஆறுமுக இரு கண்ணொளி அதுதான் முருகன்!

இதுதான் சிவனும் சக்தியும் முருகனும் சேர்ந்த சோமாஸ் கந்த தத்துவம்! வள்ளலாரின் முதல் அனுபவம் ஞான தவம் இதுவே! கண்ணாடியில் தன் கண்ணை பார்த்துத்தானே தவம் செய்தார்! தன் உருவம் மறைந்தது! ஒளி பொருந்திய இரு கண் மட்டுமே தெரிந்தது! ஆறுமுகங் கொண்ட திருத்தணிகை முருகன் தோன்றினார்! நம் இரு கண்ணே ஆறுமுகம்! எல்லோர்க்கும் கிடைக்கும் முதல் ஞான அனுபவம் இது !

தத்துவத்தையும் அனுபவத்தையும் போட்டு குழப்பிவிடாதீர் !
அனுபவத்தை கூறவே தத்துவம்! 

சிந்தித்தாலே தவம் செய்தாலே தத்துவம் புரியும்! தவம் செய்யாதவருக்கு கதையே! புராணமே ! தவம் செய்யாதவர்கள் உடல் வளர்ந்த குழந்தையே ஆவர்!

மூலாதாராம் கீழே என்றால் அவனுக்கு காமமே மிச்சம்! கடைதேருவது கடினம்!

நாம் இடகலையில் ஆரம்பித்து வலக்கலையில் ஸ்திரமாக நிற்கணும்! நடராஜர் இடது காலை ஊன்றி நிற்பது போலே! நின்றால்; மேலே ஒளியும் ஒலியும் காணலாம் கேட்கலாம் ! நம் ஞான தவ நிலையை குறிப்பதே நடராஜ தத்துவமாம்! இதுவும் சிதம்பர ரகசியம்தான்!

தவத்தால் கண்ணில் மணியில் ஒளியை நினைத்து உணர்பவருக்கு அக்னி உருவாகும் !

அந்த உஷ்ணம்  சுத்த உஷ்ணம் ! அந்த சூடால் உடல் பாதிக்காது ஜோதி சூழ்ந்து வரும் ! குளுர்ச்சி பொருந்திய நெருப்பு! சந்திர ஒளி போல!

இந்த ஜோதியால் சகஸ்ராரம் பூரித்தால் நம்மும்மலம் மட்டுமல்ல உச்சியில் உள்ள  கோழை என்கின்ற மலமும் கழியும்! வினையகலும் அமுதம் பருகலாம்! ஞானம் பெறலாம்!

திருமந்திரம் மட்டுமல்ல எல்லா சித்தர்களும் ஞான அனுபவங்களை தெளிவாக கூறி நாமும் ஞானம் பெற வழி காட்டியுள்ளனர்!



- ஞான சற்குரு சிவசெல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts