ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

பிறப்பின் ரகசியம்


"வினை விதைத்தவன் வினை அறுப்பான்"

சுவற்றில் எறிந்த பந்து அதே போல் திரும்பி வந்தே தீரும்!

எத்தனையோ பிறவிகளாக நாம் செய்த நல்வினை தீவினைகள் இப்படி மூட்டை மூட்டையாக இருக்கின்றது!!

ஆனால் இறைவன் நம் மீது இரக்கம் கொண்டு, கருணை கொண்டு அவ்வளவு வினைகளையும் நம்மிடம் தராமல் நல்வினை தீவினை இரண்டிலும் கொஞ்சமாக எடுத்து நம் உயிரோடு இணைத்து பிராரத்துவ கர்மத்துடன் விதிக்கப்பட்ட கர்மத்துடன் நம்மை மனிதனாக இப்பூவுலகில் பிறப்பிக்கச் செய்துள்ளார்! பிறப்பின் ரகசியம் இது !

"பற்றித்  தொடரும் இருவினையன்றி வேறொன்றில்லை பராபரமே"  என்று சித்தர் பெருமகனார் கூறியுள்ளார்!

பிராரத்துவ வினைகளோடு பிறந்த மனிதன் புரியும் கருமங்கள் ஆகான்மியம் எனப்படும். பிராரத்துவம் - விதி ஆகான்மியத்தோடு சேர்ந்து வினை கூடவோ குறையவோ , அதாவது புண்ணியம் நிறைய செய்து நல்வினை கூடலாம்,  அல்லது பாவம் நிறைய செய்து தீ வினை கூடலாம். இப்படி எதாவது செய்து எதையாவது பெற்று அந்த வினைகளோடு மரிக்கிறான்!

ஓவ்வொரு மனிதனும் செத்து உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினை பயன்கள் மட்டுமே!  ஆக பிறக்கும் போது உயிரோடு வரும் வினை !, வாழ்ந்து இறக்கும்போது அந்த  உயிரோடு போய் விடுகிறது!!  பிறக்கும் போது வந்ததை விட கூடவோ குறையவோ செய்யலாம்!

விதியில் இருந்து வினையில் இருந்து தப்பித்த ஞானிகள் உபதேசப்படி நம் வாழ்கையை செம்மைபடுதிக் கொண்டால் !! வினைகளை அழித்துவிட்டால் !! சாகாமல் இருக்கலாமல்லவா ?! வினையிருந்தால் தானே சாவு ! வினையிருந்தால்  தானே மீண்டும் பிறப்பு ஏற்படும் ?! வினை இல்லாமல் செய்துவிட்டால் ?! பிறந்த நமக்கு முதலில் இறப்பு கிடையாது ? இறப்பு இல்லையெனில் ஏது பிறப்பு ?!

திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

1 கருத்து:

  1. இன்னும் இன்னும் என்பதாக ஆர்வத்தை பற்றி எரிய செய்யும் ஆன்மீக விசயங்களை பதிவிட்டு காத்து இருக்க செய்வதே உங்கள் பதிவின் ஆழம்

    பதிலளிநீக்கு

Popular Posts