புதன், 23 அக்டோபர், 2013

அவரவர் நந்தியே குருவாக அமையும் அகத்திலே!!


நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே----------திருமூலர்

நந்தி அருளாலே என்கிறாரே சிவன் அருளால் என்று கூறவில்லையே ஏன்? சிவனை விட பெரியவரா நந்தி?! இறைவனை கும்பிட வேண்டுமா? அவர் வாகனத்தை கும்பிட வேண்டுமா? குழம்பாதீர்கள்!?

திருமூலர் ஒரு ஞானி! அவர் உரைத்தது அனைத்தும் ஞானம்! அறிவுபூர்வமானது. சிந்தித்து அறிய வேண்டும்! மேலோட்டமாக பார்த்தால் பொருள் புரியாது! குரு உபதேசம் பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும்! குரு உபதேசம் பெற்றவரே அறிவர் ஏனெனில் மெய்ப்பொருள் உணர்ந்தவர் அல்லவா? ஞானநூல் விளக்கம் குருமார்களிடந்தான் கேட்க வேண்டும்.

நந்தி என்றால் நம் "தீ" என்று பொருள்! நம் உடலில் உள்ள "தீ". அது தான் நம் உயிர் - பிராணன் - ஆன்மா என்பது அதாவது மெய்ப்பொருள் உணர்ந்து தவம் செய்து நம் தீ நம் உடலினுள் உள்ள ஜோதியான நம் ஜீவனை பற்றி அதையே குருவாக பெற்றவர்கள் நந்தி அருள் பெற்ற நாதாக்கள் ஆவார்கள்.!

அங்ஙனம் பரம்பொருளே ஆதிகுருவாக தட்சிணாமூர்த்தியாக வந்து மெய்ப்பொருள் உபதேசம் உணர்த்தியது சனகாதி முனிவர் நால்வருக்கு!!! தவத்தால் தம் தீயை அறிந்தனர் உணர்ந்தனர் உய்வடைந்தனர் சனகாதிமுனிவர் நால்வருமே!

நம் தீயை உணர்ந்த சனகாதிகள் நால்வர் சிவயோகமுனிவர் அகத்தியர் பதஞ்சலிமுனிவர் வியாக்ரபாத முனிவர் திருமூலர் ஆகிய எண்வரும் நந்தியை உணர்ந்து அருள் பெற்று "நாதர்" ஆனார்கள்! நந்தி அருள் பெற்றவர்கள் நாதர் என்று அழைக்கப்பட்டனர்.

நந்தியை உணர்ந்து நம் தீயை உணர்த்து தீயாகவே நான் அதுவாகவே மாறிவிடுவதே மோட்சம்! முக்தி! ஞானம்! நந்தி அருள் பெற்று நந்தியாகிவிட்டனர்! திருமூலரும் அங்ஙனம் நந்தி அருள்பெற்று நாதராகி அவர் உள் தீ வழிகாட்ட பரம்பொருளை எல்லாவற்றிக்கும் மூலவஸ்துவை நாடினார்! பெற்றார் அருள்! ஞானம்! அவர் உள் தீ - நந்தி வழிகாட்ட இறந்து கிடந்த இடையன் மூலன் உடலினுள் கூடுவிட்டு கூடுபாய்ந்து புகுந்து திருமூலரானர்!

நந்தி அருள் பெற்றால் அட்டமாசித்தியும் கை கூடுமன்றோ! திருமூலரால் திருமந்திரம் உரைக்கப்பட வேண்டும் என்பது திருமூலரின் நந்தி திருமூலரின் உள் தீயான பரம்பொருளின் சித்தமஅன்றோ!

எந்தீ - நந்தியே என் ஒரே வழிகாட்டி!

ஒவ்வொருவருக்கும் அவரவர் தீயே அவரவர் நந்தியே குருவாக அமையும் அகத்திலே!! நந்தி அருள் பெற்றவனே சிவனருள் பெற இயலும்! நந்தி வழிகாட்டிட கைலாயதுள் பிரவேசிக்க சிவதரிசனம் பெறலாம்! சிவனருள் பெறலாம்! கதைக்கு போய்விடாதீர்கள்.

உடலிலேயே மெயஞனத்திலேயே நில்லுங்கள். நந்தியாகிய ஆன்மாவை உணர்ந்தாலே அறிந்தாலே அடைந்தாலே சிவனாகிய பரமாத்மாவை நாம் அடையலாம்! வேறு வழியே கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts