வெள்ளி, 6 டிசம்பர், 2013

தனித்திரு! விழித்திரு!

நன்றாக சாப்பிட்டு விட்டு  தனிடிருக்கவா சொன்னார்? உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டல்லவா?

பட்டினி கிடந்தாலும் மயங்குவான்.
சாப்பிடாலும் மயங்குவான். தூங்குவான்!!

இல்லாததாலும் மயக்கம் இருந்தாலும் மயக்கம்!

இந்த மயக்கம் – மாயை அகல சத்விசாரம் செய்!

கூடியிருந்து செய்வது சத்சங்கம்!

தனித்திருந்து செய்வது சத்விசாரம்.

நீ யார் என சிந்தி! இது பற்றி சிந்திப்பதே சத்விசாரம்.

அதற்கு தனித்து தான் இருக்க வேண்டும்.

கூட்டமே ஆகாது ஐயா!

ஆன்ம பசியோடு பசித்திரு! அறிவு பசியோடு தனித்திரு!

கிட்டுமா? ஞானம்? ஜீவகாருண்யம் வேண்டும்! உன் ஜீவனை கருணையோடு பார்!

பரிதவிக்கும் உன் ஆன்மா இளைப்பாற தூங்காமல் தூங்கு! சும்மா இரு! ஆன்மா துலங்கும் உன் இரு விழியில் ஒளியை பார்!

ஞானம் பெற விழி விழி என விழித்திருந்து தவம் செய்! கண்ணை திறந்து விழிதிறந்து தான் ஞானதவம் செய்யணும்! ஞானம் பெற “விழித்திரு”.

பசித்து தனித்து விழித்தால் தான் மோட்ச பதவி கிட்டும். அதற்கு தேவை ஜீவ காருண்யம். உன் ஜீவனை கருணையோடு பார்த்து ஞான தவம் செய்வதே ஜீவ காருண்யம்.

ஆன்ம சாதனை. எத்தனையோ விதங்களில் நாம் மற்றவருக்கு உதவலாம். அதில் ஒன்று தான் சாப்பாடு. சாப்பாடு போட்டால் ஞானம் வரத்து. ஓரளவு அன்பு அற்றார் அழி பசியாற்றலால் கிட்டும். ஓரளவு போதாதே? அன்பு மிகுதியாகி இரக்கம் உருவாகானும். இரக்கம் தானே கருணையாக வெளிப்படும்.

இரக்கம் உள்ளதால் தானே வாடிய பயிரைக் கண்டு வாடினார்?! தர்ம சாலை கட்டினார்! கருணை இருந்ததால் தானே சத்திய ஞான சபை உருவாக்கி திருஅருட்பாவை தந்து மரணமில்லா பெருவாழ்வு பெற நமக்கு வழி காட்டும் விழியை காட்டிய ஞான சற்குருவாக விளங்குகிறார் திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்! நாம் செய்த புண்ணிய பலனால் தான் இதை அறிகிறோம்.



திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts