ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஞானமணி மாலை தக்கலை பீர்முஹம்மது

"நாலினை  யிரண்டொன்  'றாக்கி  நடுவினிலருளை  நோக்கி
நூலினை  படித்தோர்  தங்கள்  நொடியினைக்  கேட்பாயாகில்
மேல்வினை  வாரா  மீண்டு மெய்வினை  தொலைந்தேபோகுங்
காலனும்  வாரான்  வந்தாற்  கடிந்துயிர்  பிடிக்க மாட்டான் "
  

பீரப்பா  பாடல்கள்  அத்தனையும்  ஞான  அனுபவ  நிலையை  பகர்வதாகும் .
சாதாரணமாக  பொருள்  கொள்பவர்கள்  அறிய  முடியாது . மெய்ப்பொருள்
உபதேசம்  பெற்றவரே  அறிய  முடியும் . நாலினை  இரண்டொன்றாக்கி  -
சந்திர  கலையின் எஞ்சிய  4 கலைகளை  இரு  கண்மூலம் தவம் செய்யும்போது  ஒன்றாக்கி  உள்ளே  அக்னி  கலையில் சேர்க்கும்  தந்திரமே !

   நடுவினில்  அருளை நோக்கி  ​- நம்  சிரசு  நடுவில்  உள்ளே  நோக்கி
நூலினை  படித்தோர்  - ஞான நூற்களைப்  படித்து குருவை  யடைந்து
உபதேசம்  பெற்றவர்கள் . தங்கள்  நொடியினை  கேட்பாயாகில்  மேல்வினை
வாரா  - தவம்  செய்பவர்களுக்கு  துன்பம்  தருவதான  முன்  வினைகள்  -
பிராப்த  கர்மம்  வராது  தொலைந்து  போகும் . இப்  பிறப்பெடுத்த  பின்
வரும்  ஆகாமிய  கர்மம்  தவம்  செய்பவர்களுக்கு  வரவே  வராது .

    காலனும்  வாரான்  வந்தாற்  கடிந்துயிர்  பிடிக்கான்

    "தவம்  செய்வார்க்கு  அவம்  ஒருநாளு  மில்லை " ஔவையார்  கூற்று .
தவம்  செய்பவரை  எமன்  அணுக முடியாது ! உயிர்  பிரியாது ! மரணம்
கிடையாது ! பேரின்ப  பெருவாழ்வே .

ஞான  சற்குரு  சிவசெல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts