ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

புறப்பார்வை - அகப்பார்வை

முத்துக் கண்ணை  முறுக்கித்  திருத்தியே
யகத்துக்  கண்ணை  யறுத்துப்பிளந்தபின்
வகுத்த  சோதி  மணிவிளக்  கென்னுளே
தொகுத்துப்  பார்க்கச்  சுகம்பெற்றாய்  நெஞ்சமே
~ஞான மணிமாலை , தக்கலை பீர்முஹம்மது


       நம்  கண்களை  முருக்கித்  திருத்தி  என்றால்  முன்னால்
பார்ப்பதை  விட்டு  திரும்பி  உள்ளே  பார்ப்பதாகும் ! அகத்து  
கண்ணை  அறுத்து  பிளந்து  என்பது  நம்  கண்மணி  மத்தியிலுள்ள
ஊசிமுனை  துவாரம்  அடைபட்டிருக்கிறதை  அறுத்து  பிளந்து -
அடைத்துக்  கொண்டிருக்கும்  படலம்  அறுபட்டு  நீங்குவது
என்பதாகும் ! அதன்பின்  தோன்றும்  ஜோதியை  பார்க்கப்
பார்க்க , மூன்று  ஜோதியையும்  ஒன்றாக்கி  தொகுத்துப்  பார்த்தால்
சுகம்  பெறலாம்  என்பதாகும் .

      நம்  கண்  புறப்பார்வையை  விடுத்து  அகப்பார்வை  மூலம் 
முச்சுடரையும்  ஒன்றாக்க  சாதனை  செய்தால்  பேரானந்தம்  கிட்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts