ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

பணிவே ஒருவனை இறைவனிடம் சேர்ப்பிக்கும்

"பக்தியாய் விழிக ளிரண்டும் பரமதி லொடுங்கினாக்கால
~ ஞானப்பால், தக்கலை பீர்முஹம்மது

நம் இருவிழிகள் பரமாகிய அக்னியுடன் உள் உள்ள மூன்றாவது கலையுடன் ஒடுங்க வேண்டும் . அதற்கும் பக்தி வேண்டும் . அன்பு வேண்டும் . இதைத்தான் வள்ளல் பெருமான் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழுங்கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்று வனைந்து வனைந்து ஏத்துதும் என்கிறார். சாதனை செய்ய வேண்டும். பக்தியோடு செய்ய வேண்டும்.அப்போது தான், அன்பும் கருணையும் நம்மில் உருவானால்தான் அன்பே உருவான இறைவன் அருள் தருவான்! பக்தியே ஒருவனை பணிய வைக்கும்! பணிவே ஒருவனை இறைவனிடம் சேர்ப்பிக்கும்! பக்தியோடு தவம் செய்ய வேண்டும்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts