ஞாயிறு, 17 மே, 2015

பக்தி இருந்தால் ஞானம் மலரும்.

பக்தியில்லாமல் வறட்டு வேதாந்தம் பேசுவோர் ஒருக்காலும் இறைவனை உணரார்! பக்தி இருந்தாலே ஞானம் மலரும்.பக்தி இருந்தாலே நல்ல பண்புகள் வரும்.அவனே உத்தமன் ஆவான்.அப்படி பட்டவனே குருவை பணிந்து உபதேசம் தீட்சை பெற முடியும்! பக்தியில்லாதவன் பணிவு இல்லாதவன் ஞானம் பெற முடியாது!  பணிந்தவனுக்கே பரமன் அருள்! குருவை பணிந்தவர்களுக்கே பரமன் அருள் கிட்டும்! குருவை பெற்றவனே வைராக்கியத்துடன் தவம்  செய்வான்! அது மட்டும்
போதாது!?  சக்தி அருள் தரில் இவையெல்லாம் எளிதாக கிடும்மாம்! சக்தி தான் வாலை !

நம் இடக்கண் சக்தி! நம் சிர நடுவில் விளங்கும் சிவசக்தி! அந்த சக்தியை பக்தியால் போற்று! கன்னியா குமரியிலே முக்கடல் தீரத்திலே எத்தனையே கடல் கோள்களையும் தாண்டி இன்றும் நின்றும் நித்தம் தவம் செய்யும் வாலைதாய்! வா! பார்! பணி! சக்தியை பணிந்து உன்சக்தியை பெருக்கு சக்தி அருள் பெற்று சிவத்தை பார்! தாயை விட அந்த சக்தியை விட தயவுடையார் வேறு யார்?

தாயை பணி தலைவனை காணலாம்! தன்னிகரில்லாதவன் ஆகலாம்!அவனே ஞானம் பெற்றவனாவான்! எளிதாக இறைவனை அடைய குருவை நாடி உபதேசம் பெறு! தீட்சை பெறு  !பக்தியுடன் வாலை தாய் அருள் பெறு ! வைராக்கியமாய் இருக்கலாம் ஞானி ஆகலாம்! சக்தியை பணிந்தால் எல்லாம்
எளிது! இதுவே ரகசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts