திங்கள், 19 அக்டோபர், 2015

கண்ணன் - கோபியர் : ஞானத்தில்



அண்ணல் கண்ணன் ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய்
உன்மகனை கூவாய் -பெரியாழ்வார்

கண்ணன் புறத்தே போய் கோபியர் வீடு சென்று எல்லோருக்கும்
துன்பத்தை கொடுக்கிறான். கோபியர்கள் யசோதையிடம் சென்று
உன்மகனை வெளியே விடாதே வீட்டுக்கு உள்ளே கூப்பிடு
வீட்டிலே இருத்தி விடு என்கிறார்களாம்!

கண்ணன் புறத்தே போனால் என்றால் நம் மனம் போனது எனப்பொருள் !
மனம் போன போக்கில் போனால் என்ன ஆகும்? துன்பமே மிச்சம்!
கண்ணனை வீட்டின் உள்ளேயே இருத்தி விட்டால்! நமது மனதை
கண்மணி ஒளியிலே இருத்தி விட்டால் பேரின்பமே! அதனால்
கண்ணனை வெளியே விடாதீர்கள்! வெளியே பார்க்க பார்க்க
வினையே! உங்கள் பார்வையை வெளியே விடாதீர்கள்! பார்வை
உள்ளே திரும்பினால் ஒளி கண் ஒளி பெருகும்! உன்னையே நீ
காணலாம்! இதைதான் பைபிளில் இயேசு பெருமானும் கூறுகிறார்!
மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபத்தில் இருக்கிறது
 என்று! வெளியே இருக்கும் மனதை கண் உள்ளே திருப்பி விடுங்கள்
உள்ளே போனால் பரலோகம்  அங்கே தான் பரம பிதா!

கிருத்துவர்களுக்கு பரமபிதா! வைணவர்களுக்கு பரம பதம்!

வெளியே போகாதே இனி இங்கேயே இரு என  யசோதை கிருஷ்ணனை
வீட்டிலே இருத்தினாள்! கோபியர்கள், யசோதையிடம் உன் கண்ணனிடம் கூப்பிட்டு கொள். இல்லையேல் எங்களை வாழ விடாமாடான் என முறையிடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts