புதன், 21 அக்டோபர், 2015

ஸ்ரீ வித்யை - பாலா



கன்னியாகுமரி பகவதியே பாலா - வாலை! திருக்கடையூர்
அபிராமியும் பாலாவே! அபிராமி பட்டருக்கு அருளியது
வாலையே! மதுரை மீனாட்சி பாலாவே! குமாரகுருபருக்கு
அருளியது வாலையே! விருதாச்சலத்தில் பாலாம்பிகை
தனி சந்நிதியில் அருள்புரிகிறாள்! வைத்தீஸ்வரன் கோவில்
அம்பிகை பெயரும் பாலாம்பிகை!

வைதீக முறைப்படி பாலா மந்திரம் பிரசித்தம். ஸ்ரீ வித்யை
உபாசகர்கள் பாலாவை ஆராதிப்பார்கள் அது பக்தி கர்ம நிலையே!
ஞானம் அதி தீவிரவாதிகளுக்கே கிட்டும். அபிராமி பட்டரை
போல விளங்க வேண்டும்!

நான் யார் என அறியும் ஞான நிலையே எளிது! சித்தர் நிலை!
தாயல்லவா? எல்லோருக்கும் கருணை கிட்டும்! குழந்தை -
பாலா-வாலையல்லவா ஞான விளையாட்டு விளையாடலாம்
வாங்க! விளையாட்டாகவே தவம் செய்யலாம்! சும்மாவே
இருக்கலாம்! குருவை பணிந்து எட்டிரண்டு கூட்டி  பத்து
என்று அறி! அறிவு துலங்கும்! அதுவே ஞானம்! பத்தாமிடமே
'ய'  வே, வாலை இருக்குமிடமாம்! அவள்தான் கன்னி  'ய'  குமரி
பகவதி! உலகுக்கே தாய்! பொங்கி எழுக! பிடிவாதத்துடன்
பற்றற்று இரு! வாலை அருள்வாள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts