வெள்ளி, 23 அக்டோபர், 2015

பச்சை புறா??

ஓங்காரி என்பா ளவளொரு  பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி யாகியே ஐவரை பெற்றிட்டு
ரீங்காரத்துள்ளே யினிதிருந் தாளே

ஓம் பிரணவ மந்திரத்தின் ஒலியாகும் அவள் !
அதனால் தான் அவளை ஓங்காரி என்பார்! அவள் பெண்!
சிவத்தின் சரிபாதி! வாலை! குழந்தை! உலகுக்கே தாய்!
ஆனால் கன்னி! நீங்கத பச்சை நிறத்தையுடையவள்! சிவம்
செம்மை நிறம் உடையது! நாம் தவம் செய்து வரும் போது
பச்சை நிறம் தோன்றும்! இதையே தக்கலை ஞானமா மேதை
பீர்முகமதுவும் பச்சை புறா வந்து மேயும் அதை பாங்குடனே
பிடித்து! என்று பாடி அருள்கிறார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts