ஞாயிறு, 8 மே, 2016

வள்ளல் பெருமான் எத்தகைய மக்களை தவிர்த்தார் / விரும்பவில்லை?

"நின் திருவடிதியானம் இல்லாமல் அவமே சிறு தெய்வ
நெறி செல்லும் மானிட பேய்கள் பேய்கள் பால் சேராமை ஏற்கருள்வாய்" - திருவருட்பா

மேல் உள்ள பாடலில் வள்ளல் பெருமான் இறைவனிடம் திருவடி தியானம் செய்யாதவர்கள் , சிறுதெய்வ வழிபாடு செய்து உயிர் கொலை செய்பவர்கள் தனது அருகில் வராமல் காத்து அருள் புரிய வேண்டும் என வேண்டுகிறார். விரிவான விளக்கம் - ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் திருவருட்பா மெய்ஞான உரை என்ற புத்தகத்திலிருந்து :
ஒளியான இறைவா உன் திருவருள் அனுவளவேனும் கிடைத்தால் சிறு துரும்பும் முத்தொழிலை செய்யும் ஆற்றல் பெறும்! என வேதங்கள் உரைக்கின்றனவே! இதை உணராமல் இந்த மானுட ஜன்மங்கள், இறைவன் திருவடி தியானம் செய்யாமல் ஞானம் சிறிதேனும் இல்லாமல் செத்தொழிகிண்டறனர் !? மாதா பிதா பெற்ற மானிட பிறவிகள், குருவை பெற்று ஞானம் பெற்று தெய்வத்தை அடைய முயற்சி கூட செய்ய மாட்டேன் என்கிறார்கள்!? அறியாமையால் மூழ்கி கிடக்கும் மாந்தரை பார்த்து இவ்வுலகில் தோன்றிய அனைத்து மகான்களும் வேதனை பட்டனர்! விரக்தி அடைந்தனர்! ஞானம் பெற விரும்பாமல் நரகம் போக வேக வேகமாக செயல் படுகின்றர்கள் என ஞானிகள் எல்லோரும் வருந்தினர்!
உலகத்திற்கே ஞானம் போதிக்கும் எண்ணிலா ஞானிகள் இருக்கும் ஞான பூமியாம் இந்தியாவில் இருந்து கொண்டு இந்த திருவடி ஞானம் அறியாதவர்களை என்னவென்று சொல்வது! இறைவனை அறியாதது மட்டுமல்ல! இறை நிலைக்கு விரோதமாக செயல்பட்டு பாவ மூட்டையை மேலும் சேர்கிறார்கள் அந்தோ பரிதாபம்!
இறைவனை அறியாமல், உணராமல் தெய்வம் என்று கண்டபடி பற்பல தீயவழிபாடுகள் புரிந்து கெட்டும் போகிறீர்கள்! சிந்தியுங்கள்! எல்லா உயிரகளையும் படைத்த இறைவனுக்கு நீயார் உயிர்பலி கொடுக்க!? இறைவன் படைத்த உயிரை கொல்வது
அந்த இறைவனுக்கு விரோதமான காரிய மில்லையா?! சிறு துரும்பை கூட அசைக்க சக்தி இல்லத நீ எப்படி பிற உயிரை அழிக்க முனைந்தாய்? பிற உயிரை வதைப்பவன் மிருகமேயாவான்! அவன் மனித உருவில் உள்ள பேய்கள்!? சாமிக்கு மது மாமிசம் படைக்கும் அறிவிலிகள் மற்றவர்களிடம் அன்பாகவா நடந்து கொள்வார்? இப்படி பட்டவர்கள் தான் பேய் குணம் கொண்டவர்கள்! இவர்களால் தான் நாட்டில் பஞ்ச மா பாதகங்களும் நடக்கின்றன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts