வியாழன், 1 டிசம்பர், 2016

காமத்தை எரிப்பது ?

காமத்தை-மாயையை எரிப்பது விளக்கான நம் கண்மணி ஒளியே
மும்மலங்களில் ஒன்றான மாயை - காமம் கண்ணொளி உணர்வால் பெருகும் ஒளியால் எரிந்து போகும்.

இது அனுபவம்.காமம் அழிந்தால் தான் மெய்ஞானம்.
தவம் செய்யும் போது கண் திறந்திருக்கவேண்டும்.ஆனால் பார்க்கக்கூடாது.எப்படி?


கண்ணில் மணியின் உணர்வை குரு மூலம் தீட்சை மூலம் பெற்று இருத்தினால்,மனம் கண்மணி உணர்விலே லயித்து நின்றால்,மனம் வேறு எங்கும் போகாது.உணர்வு மணியிலே இருக்கும் வரை மனம் அதிலேயே இருக்கும்.இப்படியே இருக்க இருக்க புறப்பார்வை அற்றுவிடும்.அகப்பார்வை கிட்டும்.இதுவே மடை மாற்றம் என்பதாம்.


மனம் ஆகிய முயலகன் என்ற அரக்கனை தட்சிணாமூர்த்தி தன் பாதங்களில் போட்டு மிதித்து வைத்திருக்கிறார்.


பாதம் என்றால் - திருவடிகள் என்றால்- கண்கள். எனவே நம் கண்களில் மனதை நிறுத்தினால் மனம் அடங்கும் என்பது ஞானம்.
 

மனமடங்க வேறு மார்க்கம் இல்லை.
புலால் உண்பவனுக்கு ஞானம் கிட்டாது.
 

சத்தன்-சிவன்-வலது கண்-சூரிய கலை.சக்தி-இடது கண்-சந்திர கலை.கண்மணி உணர்வு பெற்று தவம் செய்யும்போது சில சமயம் இடது கண்ணும் சில சமயம் வலது கண்ணும் உணர்வு மேலோங்கும்.எது வந்தாலும் முடிவில் இரண்டும் ஒன்றாகிவிடும்.மூலம் என்றால் கண் என அகத்தியர் கூறுவார்.ஆசன வாயருகே உள்ள மூலம் கீழ் மூலம்.அது கர்ம பலன் நல்குவது.ஞானத்திற்கு கழுத்திற்கு மேல் தான் எல்லாம்.தலை தான் தலையதாகும்.

மூல முதல் ஆதாரம் ஆறையும் கீழ் தள்ளி,முதிர்ந்து நின்ற மேலாதாரம் பாரு பாரு என்றார் அகத்தியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts