வெள்ளி, 2 டிசம்பர், 2016

மெய் மறக்கலாகாது.

கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்சென்று அவ்வெளியில் நிற்கையிலே,விண்ணிலுள்ள ஆறு,நெருப்பாறு வந்து அந்த வெளிவழி பாய்ந்து வருவதைக் காணலாம்.

இந்த ஊசிமுனை துவார உள் பாதையே மயிர் பாலம்.அது வழியே நெருப்பாறு பாய்ந்து வரும்.அக்னி கலையிலிருந்து ஒளி வெள்ளம் வரும்.அந்த ஒளி தண்ணொளி,விண்ணில் பாய்ந்து வரும் சுடர் நெருப்பு.சுகமான அக்னி.குளிர்ச்சி பொருந்திய தீ.அதுவே "சுயஞ்சோதி" !

நடு மூக்கு - இது பரிபாஷை ! மூக்கைப் பார்த்து மோசம் போனவர் ஏராளம்.தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா?அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்லுவோம்.நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு.கண்ணைத்தான் இங்கு திருமூலர் மூக்கு என்கிறார்.
தவறாக பொருள் கொண்டு மூக்கைப் பார்த்து மூச்சை அடக்கி மோசம் போவார் பலர்.போலி குருக்களால் மூச்சுப்பயிற்ச்சி செய்து மோசம் போகாதீர்கள்.
 

கண் வழியே ஒளி ஊடுருவி ஆத்மஸ்தானத்தை அடையும் போது தசவித நாதம் கேட்கும்.ஆணவம் கொண்டோருக்கு ஒருபோதும் கிட்டாது.

துணிந்தவர்க்கே துணையாவாள் தாயானவள். 

ஒளியைக்கண்டு,ஒலியைக்கேட்டு ஆனந்தம் அடைந்தவர் அம்மையைக் காண்பர்.
 

தவம் புரிவோர் பின் அவ்விடத்திலே நிலைத்து இருக்க வேண்டும்.அப்போது தான் விடமுண்ட கண்டனை காண முடியும்.நாத முடிவிலே தான் இவையனைத்தும்.
 

அங்ஙனம் சமாதி கூடியவர்க்கு அட்டமா சித்தியும் கை கூடும்.சமாதி கூடிய அன்றே தான் ஆகிய ஆத்மாவுடன் கூடிய பரமாத்மா கைவல்யமாகும்.
 

சமாதியில் நின்று விடலாகாது.மேலும் மேலும் தவம் கூடக்கூட ஊன் உடலே ஒளியுடல் ஆகும்.
 

சமாதி நிலை ஞானத்தின் ஒரு படியே.சமாதி கூடி மெய் மறந்து போன தவ சீலர்கள் கோடி கோடிபேர்கள் நம் நாட்டிலுன்டு.

மெய் மறக்கலாகாது.
 

"சாயுச்சியம் பெற வேண்டும்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts