ஞாயிறு, 12 மார்ச், 2017

தூக்கத்தை ஒழி

தூக்கமில்லா ஆனந்ததூக்கம் - பாடல் 22

தூக்கம் என்பது மனிதனின் உடல் உள் உறுப்புக்கள்
சோர்வடையும் போது தேவையான ஒன்று உள் உறுப்புகள்
அயர்ந்து ஓய்வு கொள்வது தூக்கம்! தூங்கும் போது உயிர் ஆதாரத்தில்
ஒடுங்கும்! சராசரி மனிதனுக்கு தூக்கம் இன்றிமையாதது! ஆனால்
தவம் செய்வோர்க்கு தூக்கம் ஒரு தடை! "தூங்காமல் தூங்கி " சுகம்
பெறுவது எக்காலம் என ஒரு சித்தர் பாடியுள்ளார்!

நாம் கண்மணி ஒளியில் உணர்வை வைத்து தவம் செய்ய செய்ய ஒளிபெறுகி உயிர் ஆற்றல் பெருகி  உடல் உள் உறுப்புகள் அதிக சக்தி பெறும், சோர்வடையாது, உற்சாகம் கூடும் உணர்வு பெருக பெருக  ஆனந்தம் மேலிடும் அதுவே ஆனந்த தூக்கம் என வள்ளலார் கூறுகிறார்.

சும்மா சும்மா தூங்கி தூங்கி வழிபவன் முடிவில்
மீளாத தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவான்! இறந்து விடுவான்! தூக்கத்தை
ஒழித்தவனே! உடலை, உணர்வுடையவனாக உற்சாகமாக வைத்திருப்பவனே
நெடுநாள் வாழவான்! அதற்க்கு தவம் தேவை! "ஒருவன் ஒரு நாளைக்கு
ஒருமணி நேரம் தூங்க பழக்கம் செய்வானாகில் அவன் ஆயிரம் வருடம்
ஜீவித்திருப்பான்" என வள்ளலார் கூறுகிறார்! வள்ளலார் சொன்ன தூக்கம்
ஆனந்த தூக்கம்! தூங்காமல் தூங்கி சுகம் பெரும் தவ நிலை! உடல்
தூங்காமல் மனம் மயங்காமல் உணர்வுறு நிலையில் சும்மா இருப்பதே
தூங்காமல் ஆனந்தமாக தூங்குவது ஆகும்! ஒருநாளைக்கு ஒரு மணிநேரம்
தூக்கமில்லா ஆனந்த தூக்கம் கொள்வார் ஆயிரம் வருடம் ஜீவித்திருப்பார்
இதுதான் வள்ளலார் வாக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts