Tuesday, February 20, 2018

ஞானகுரு பெற்றவனே பூரண மனிதன்!

"பக்தியாய் பணிந்த பேர்க்குப் பரவெளி காணலாமே"
பாடல் 18

ஞானம் ஞானம் என்று கூறிக்கொண்டு வறட்டு வேதாந்தம் பேசித்திரிவதில் அர்த்தமில்லை!தத்து பித்து என்று தத்துவ விளக்கம் கூறி பிரயோஜனமில்லை!

*குருபக்தி வேணும்*!குருவினடி பணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் என ஔவைக்குறள் கூறுகிறது.

குருவில்லா வித்தை பாழ்!சுட்டிக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது!

யார் ஒருவர் குருவை பெற்று−உபதேசம் பெற்று−திருவடி தீட்சை பெற்று குருவே சரணம் என பக்தியோடு சரணாகதியாகி இருப்பாரோ அவரே இறைவனை அடைவர்!

"பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் இறையை காட்டும்"!

*ஞானகுரு பெற்றவனே பூரண மனிதன்!*

பக்தி வேணும். *சரணாகதி வேணும்* அவனே இறைவன் திருவடியை அடைவான்!

ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் ஐயா...
நூல்:ஞானக்கடல் பர்முஹம்மது
பக்கம்:48

யார் குரு?

யார் நம் அறிவை தூண்டி, நாம் யார்? என அறிய வழிகாட்டி, *விழியில் உணர்வை ஊட்டுகிறாரோ அவரே குரு!*

ஒப்பற்ற குரு! சத்குரு! ஞானகுரு!

*நாம்யார் என ஒருவன் உணர வழிகாட்டும் அந்த ஒப்பற்ற குருவை! ஒருவன் வாழ்க்கையில் கடைத்தேற முடியும்!*

உலக வாழ்வில் சிறப்பாக, நோயின்றி, வாழ்வாங்கு வாழ்ந்து *இனி பிறவாமல் இருக்க யார் வழி சொல்கிறாரோ அவரே சத்குரு!*

அறியாமையில் உழலும் மனிதன் சிந்தனையை தூண்டி, பிறப்பறுக்க, *விழியால் உணர்வூட்டி முன்னேற்றுபவரே ஞானகுரு!*

ஒப்பற்ற குருவே சத்குரு!

சத்குருவே ஞானகுரு!
*நாமும் பெற்றால் தான் தப்பித்தோம்!*
இல்லையேல் மீண்டும் மீண்டும் பிறவிப் பிணிதான்!

*ஞான சத்குரு சிவ செல்வராஜ் ஐயா*
நூல் : சநாதன தர்மம்
பக்கம் : 36
குருவின் திருவடி சரணம்

மனப்பூட்டை திறப்பது மெய்யாலே

"பூட்டை திறப்பது கையாலே மனப்பூட்டை திறப்பது மெய்யாலே"
என"ஒரு சித்தர் பாடியிருக்கிறார்.

மனம் இருக்கும் கண்மணியை உள் இருக்கும் சோதியாலே உருக வைப்பதே சாதனை!

இப்படித்தான் இந்த பூட்டை திறக்கணும்!திறக்க வழி சொல்லியிருக்கிறார் பீரப்பா!

விழி திறந்து தவம் செய்யுங்கள்!அடைத்த வழி திறந்து உள்ளே செல்லலாம்!
உள்ளிருக்கும் சோதியை காணலாம்!

உன்னையே நீ காணலாம்!நீ வேறு யாருமல்ல!அந்தப் பரம்பொருளின் ஒரு சிறுதுளிதான்!

அந்த பெருஞ்ஜோதியின் ஒரு சிறு ஜோதி துகள் தான்!

ஞானசற்குருதிரு சிவசெல்வராஜ் ஐயா..குருவின் திருவடி சரணம்🙏👁👁🙏...
நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது
பக்கம்:55

நெருப்பாறு - பொய்கை

"ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப் போல" 
பாடல்- 948(திருநாவுக்கரசர்)

சிவனோடு வாதம் புரிந்தவர் சுந்தரர்!
சிவனருளால் பெற்ற பொன்னை ஆற்றிலே போட்டார். பின் அவரூர் சென்று அங்குள்ள குளத்திலே அதையெல்லாம் பெற்றார்.

எவ்வளவு பெரிய அற்புதம் இது.
கண்மணி உள்ளே ஒளிக்கலை ஆறு போல் போகும் "நெருப்பாறு"!
அது சேரும் இடம் தடாகம் பொய்கை! அங்கே சிவன் துலங்கியிருக்கிறார்!
மனதில் சிவனை எண்ணி கண்மணி உள்ளே ஆற்றில் போட்டார்!
உள்ளே போய் குளத்தில் சிவனை தேடி பெற்றுக்கொண்டார்!
அகத்துக்கும் புறத்துக்கும் பொருந்துவதே ஞானம்! மெய்ஞ்ஞானம்!
ஞானசற்குரு சிவசெல்வராஜ் ஐயா!
மூவர் உணர்ந்த முக்கண்
(தேவாரம் விளக்க உரை )
உண்மை ஞானம் அறிய WWW.VALLALYAAR.COM 
பார்க்க 👀

உண்மை ஞானம் அறிய

நாம் தவம் செய்யும் போது முஹம்மது−ஜோதி நம்முன் தோன்றும்.

அது பச்சை நிற ஒளியாகும்.சிறிது காலத்திற்குப்பின் பச்சை நிறம் மாறி 
பவளம்−சிவப்பு நிறமாகும்.

அதாவது கண்மணியில் ஊன்றியிருந்து தவம் செய்தால் முதலில் பச்சை நிற ஒளி காணும் தவம் தொடரும் போது பச்சை நிறம் போய் சிவப்பு நிறம் காணும்!
இதைத்தான் வள்ளல் பெருமான் 7 நிற திரைகள் அமைத்து வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பித்தார்கள்..

உண்மை ஞானம் அறிய
ஞானசற்குருதிரு
சிவசெல்வராஜ் ஐயா..🙏👁👁🙏..
நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது
பக்கம்:73

கருணை மழை பொழியும்

"அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
அறிவித்த சுத்த அறிவே"

அன்பு என்பதே சிவம். நம் கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்தால் நம் கண்ணிலிருந்து நீர அருவியென கொட்டும்! சதாகாலமும் அங்ஙனம் இருப்போமானால்!

நம் கண் கருணை மழை பொழியும் கண்களாக விளங்கும்.எப்படி?

அங்ஙனம் தவம் செய்தால் நம் கண் ஒளிதுலக்கமாகும்! கண்ஒளி துலங்குபவன் அன்பு மயமாவான் கருணை வடிவாவான்! ஒளிதானே அன்பு!அது துலங்குபவனும் அன்பானவகி விடுவான்!அன்பு என்பது சிவமாகிய ஒளி 
அதை நீ வெளிப்படுத்த தவம் செய்!
அன்பாயிரு என்றால் சிவமாயிரு ஒளியாயிரு என்று பொருள்!
இதை எமக்கு அறிவித்ததே எம் கண்ணுள் ஒளியாய் நின்றிலங்கும் அந்த 
பழைய பரமசிவமே!

அதிலிருந்து வருவதே சுத்தஅறிவு!
ஞானம்! நீங்களும் ஞானம்பெற அன்பாயிரு.!

ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா..

நூல்:திருவருட்பா
மாலை மெய்ஞான உரை மூன்றாம் பகுதி.
பக்கம்:81
உண்மை ஞானம் அறிய பார்க்கவும்

ஞானக்கடல் பீர்முஹமது

"ஏட்டி லடங்காப் பொருளே
யெனதிரு கண்மணியே "
பாடல் - 11

யாராலும் சொல்லி, எழுதி, உரைக்க முடியாத அளவு மகிமை பொருந்தியது
" பொருளே " பொருளே எனது இருகண்மணியே என்கிறார் பீரப்பா!


ஞானசற்குரு
சிவ செல்வராஜ்
ஐயா

நூல் :
ஞானக்கடல் பீர்முஹமது
பக்கம் 53

யார்க்குங் குரு பிள்ளையான முஹம்மதுவே.

யார்க்குங் குரு பிள்ளையான முஹம்மதுவே. பாடல் - 15

யார்க்கும் - இந்த உலகத்திலுள்ள யாராயிருந்தாலும் எல்லோருக்கும் குரு முஹம்மதுவே!

குரு - முகம்மதுதான்!
முகம் அதுதான்! முகத்துக்கு முகமான கண்தான் அது!
நமது இடது கண் சீவன் வெளிப்படும் இடம்! நம் ஞான சாதனைக்கு நமக்கு வழி காட்டுவது நம்மை சிவத்திடம் கூட்டிச் செல்வது நம் சீவனேயாகும்! 
நம்மை இறைவனிடம் சிவத்திடம் கூட்டிச்செல்வது நம் சீவன் - நம் ஆத்மாவேயாகும். ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆத்மாவே உண்மையான குரு!

ஞான சற்குரு
சிவ செல்வராஜ்
ஐயா
நூல்: ஞானக்கடல்
பீர்முஹம்மது
பக்கம் எண் : 27

சூக்குமமான வழி!


*"சூக்கும மான வழியிடைக் காணலாம் சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்"*

நம் உள் தலை நடுவில் இருக்கும் இறைவனை அடைய வழி கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்ளே மயிர்பாலமாகும்!

அது இரு கண்மணி உள் ஆரம்பித்து ஆத்மஸ்தானம் வரையுள்ள சூக்குமமான வழி!

*பெரும் இரகசியம் இது!*

*தவம் செய்வோரே காண்பர் உணர்வர்!*

நமது கண்மணி ஊசிமுனை துவாரத்தை மெல்லிய வட்ட ஜவ்வு மூடிக் கொண்டுள்ளது.

*இதுவே நம் மும்மலத்திரை வெகு சூக்குமமான நிலையில் உள்ளது.*
ஊனக்கண்களால் காண இயலாது!

தவம் செய்யும் போது காணலாம் திரை மறைப்பை உணரலாம்!
இதெல்லாம் குரு உபதேசம் பெற்று குரு தீட்சை பெற்று தவம் செய்து 
பார்க்கலாம் உணரலாம்!

*ஞான சத்குரு சிவ செல்வராஜ் ஐயா*
நூல் : மந்திர மணி மாலை
பக்கம் : 99
உண்மை ஞானம் கூறும் ஒரே இணையதளம்
குருவின் திருவடி சரணம்

நீங்களும் நன்றாக அழுங்கள்


யார் அழுகிறாரோ அவர் அழுகையை நிறுத்த சிவன் ஓடோடி, சம்பந்தர் அழுதார் ஓடோடி வந்தார் சிவன் சக்தியோடு, பால் கொடுத்தார், நீங்களும் நன்றாக அழுங்கள் தேம்பி தேம்பி அழுங்கள் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து கண்ணீர் ஊற்றெடுத்து அருவி போல் கொட்ட வேண்டும் எப்படியோ அழுது அழுது தொழுங்கள் ஞான தவம் செய்யுங்கள் கண்ணீரோடு விதைக்கின்றவன் கம்பீரத்தோடு அறுப்பான் இது பைபிள் கூறும் ஞானம்


மூவர் உணர்ந்த முக்கண் பக்கம் - 105
ஞான சத்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள்.

கருநெல்லி


கருநெல்லி என்பது நம் கண்மணியே!உலகில் எங்காவது கருப்பு 
நெல்லிக்காய் உண்டா?கருநெல்லி−கண்டதுவே-கண்டதுதான் கருநெல்லி!
கண்டது கண்தானே!கண்தான் கருநெல்லி!கண்மணிதான் கரு!
நம் உயிராகிய கரு! அது கண்ட திருவோத்தூர்!

கண்டம் என்றாலும் கண்ணே!

கண்டம் கரியதாம் என்பது கண்மணிதானே!தேவர்கள் போற்றும் சிவஞானம் விளங்கும் மாதவனே!
நீயே ஞானசிகரமான மணி!ஒளி!தங்கஜோதி!ஞானசற்குருதிரு சிவசெல்வராஜ் ஐயா..
நூல்:திருவருட் பாமாலை மெய்ஞான உரை,மூன்றாம் பகுதி
பக்கம்:91

இனி எப்பிறவி வாய்க்குமோ?

மனிதனாக பிறந்த நீ இப்பிறவியிலாவது என்னை வந்து 
அடைகிறாயா பார்ப்போம் இறைவன் நமக்கு கொடுத்த வாய்ப்பு 
இம்மானிட பிறவி! 

இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ??
மனிதா! இப்பொழுதாவது விழித்தெழு! 

----------------------------------------------------------------------------------------

*"இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி"*
நமது தலை நடு உள் இருக்கின்ற ஒளியே சிவத்திருமேனி அதுவே மந்திரமாகும்!
*மனம் திரங்கொண்டாலே அடையமுடியும்!*
மனம் திரமாக திடமாக திருவடியில் இருந்தாலே மந்திரம் சிவம் ஒளி கைக்கூடும்!
மந்திர சித்தியாகும்!
----------------------------------------------------------------------------------------
"பத்து முகமுடையாள் நம் பராசக்தி"
பத்தாகிய ஆத்மஸ்தானத்தை அடைந்தபோதே தாயை பரத்துடன் சேர்ந்த சக்தி பராசக்தியை காணலாம்!
பத்தாமிடம், எட்டும்(வலது கண்) இரண்டும்(இடது கண்) சேர்ந்தாலே அடையும் இடம்!
அதைத்தான் *பத்து முகம் கொண்டவள் பராசக்தி என்றார் திருமூலர்!*

----------------------------------------------------------------------------------------


-ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா 

நாம் உள்ளே தேடத்தேட அவன் நம்மை பார்ப்பான்!

*"உள்ளே நோக்குகின்றோர்களை நோக்கு மருந்து"*

இறைவனை புறத்திலே தேடுபவர் ஒருநாளும் காணமாட்டார்கள்!
இறைவன் நம் மெய்யினுள்ளேயும் இருக்கிறானல்லவா?

நம் மெய்யிலே பொருளாக − கண்மணி ஒளியாக இருப்பதை அறிந்து உணர்ந்து கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்ஒளியாக துலங்கும் பரமனை உள்ளே பார்க்க வேண்டும்!

நாம் உள்ளே தேடத்தேட அவன் நம்மை பார்ப்பான்!
அவன் வடிவை ஒளியை நாம் காணலாம்!ஞானசற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா..
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞானஉரை மூன்றாம் பகுதி..
குருவின் திருவடி சரணம்🙏👁👁🙏...

Popular Posts