சனி, 24 அக்டோபர், 2015

ஆத்மாவே சைவ சமயத் தலைவன்

சைவ சமயத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வ சிவநெறி சன்மார்க்கஞ் சேர்த்துப்ப
வையத் துளார்க்கு வகுத்து வைத்தானே! - திருமூலர்

சைவ சமயத்தின் தனி நாயகன் தனிப்பெரும் தலைவன்
நந்தி! நம் தீ! ஆத்மாவே சைவ சமயத் தலைவன் என்பதை
முதலில் உணரவேண்டும்! அந்த இறைவனே நந்தியாக
வந்தமர்ந்து ஜீவர்களாகிய நாம் உயிவதற்காக குருநெறி
உபதேசித்தார் தட்சிணா மூர்த்தியாக! ஞான உபதேசம்
ஞான தீட்சை  குரு மூலம் பெற்று தெளிவு பெற வேண்டும்!
தவம் செய்ய வேண்டும்! அது என்ன தெரியுமா? எப்படி
தெரியுமா? தெய்வ  சிவ நெறியாவது சன்மார்க்க நெறியே!
எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணுவது அவர்களுக்கு
இரக்கம்  காட்டி நன்நெறிப்படி ஒழுக்கமாக இருப்பதே தவம்
குரு மூலம் கற்று செய்வதே சன்மார்க்கம் ஆகும்! சன்மார்க்க
சாதனையே நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் என எல்லா
ஞானிகளும் உபதேசித்துள்ளனர்! சைவ சமயமென்றால்
சன்மார்க்க நெறியே! சன்மார்க்க நெறி காட்டுவது நந்தியை
அடையவே! நந்தியை அடைந்தாலே சிவத்தை காண
முடியும்! சிவமே-ஒளியே  அருட்பெருஞ்ஜோதியே இறைவனாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts