புதன், 4 மே, 2016

வாலை

தூக்கத்தில் மனம் ஒடுங்கும்! ஞான தவம் செய்யும் போது மனமும் ஒடுங்கும் பிராணனும் ஒடுங்கும்! மனம் செம்மையாக பக்தி செய்! ஞான நூற்களை படி! கோவிலுக்கு போ!

புண்ணியர்களை தரிசனம் செய்! சத்சங்கத்தில் கூடு!

எல்லாவற்றிக்கும் மேலான  தாயைப் பணி !வாலையை பணி! கன்னியாகுமரிக்கு வா! பகவதியம்மனை வணங்கு!
அருள் பெறுவாய்! ஞானம் பெறுவாய்! துர்குணங்களில் இருந்து மனம் விடுபடும்!

நம்மை பெற்றவள் வாலை! நம்மை வளர்ப்பவள் வாலை ! நம்முள் இருந்து வாழ  வைப்பவளே வாலையே ! அந்த வாலையை பணிய வேண்டாமா? அருள் பெற வேண்டாமா?

மனம் ஞான தவத்தால் செயலற்றால் பிராண சக்தி வசப்படும்! மேலும் மேலும் தவம் தீவிரம் ஆகும் போது பிராணனும் நிலை பெறும் ஒடுங்கும் இதுவே சமாதி!

இங்ஙனம் சமாதி கூடி சமாதி கூடி தவம் செய்து கொண்டே வரவேண்டும்!
ஒரேயடியாக சமாதி அனுபவத்தில் ஆழ்ந்து விடக்கூடாது! இதற்குதான் தக்க
குரு வேண்டும் என்பது!? சமாதியில் மூழ்கினால் குரு தட்டி எழுப்பி விடுவார்!

ஏனெனில் குரு தீட்சை பெற்றது முதல் உன்னுடன் சூட்சும நிலையில் உன்
ஞான சற்குரு கூடவே இருப்பதால்!? சமாதி பழக்கம் பழக்கமல்ல சகஜ பழக்கமே  பழக்கம் என வள்ளல் பெருமான் தெளிவாக ஞான வழியை கூறுகிறார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts